பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பெரம்பலூர்: பெரம்பலூர்  ஐயப்பா சேவா சங்க அறக்கட்டளை மற்றும் உறுப்பினர்கள் சார்பில் 57 ஆம் ஆண்டு மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ் டாண்டு அருகே மேற்கு வானொலி திடலில் உள்ள ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் பெரம்பலூர்  ஐயப்ப சேவாசங்க அறக் கட்டளை மற்றும் உறுப் பினர்கள் சார்பில் 57 ஆம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகோத்சவ விழா 3 நாட்கள் நடைபெறத் திட்ட மிட்டு, கடந்த 9ம்தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று (10ஆம் தேதி) நிறைவுவிழா நடைபெற்றது. ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவர் குருசாமி ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற மண்டல பூஜை நிறைவு விழாவில், குரு வந்தனம் மற்றும்  கற்பக விநாயகர்,  ஐயப்ப சுவாமி, பாலமுருகன் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து யாக வேள்வியுடன் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மண்டல பூஜை நிகழ்ச்சியில் பெரம்பலூர்  ஐயப்ப சேவா சங்க அறக் கட்டளையின் செயலாளர் பொன் முத்தையா, பொருளாளர் பவானிசிங், துணை பொருளாளர் வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ரவிக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், குரு சாமி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சேவாசங்க அறக் கட்டளை உறுப்பினர்கள் மற்றும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு