பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் 11 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெரம்பலூர்,செப்.7: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த சிறப்பு மனு முகாம். 11மனுக்கள்மீது நடவடிக்கைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று (6ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பொதுமக்களிடம் மனுக்க ளைப் பெற்றார்கள். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் கலந்து கொண் டார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 11 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.முகாம் குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தெரிவிக்கையில் ஒவ்வொரு வாரமும், புதன்கிழமையன்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும்.

பொது மக்கள் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்