பெரம்பலூர் அருகே மாநில அளவிலான ஜூடோ தேர்வுப்போட்டி

 

பெரம்பலூர்,செப்.30: பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 2023- 2024ம் ஆண்டிற்கான இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் பங்கு பெற தமிழ்நாடு ஜூடோ மாநில அளவிலான தேர்வுப்போட்டி நேற்று(29ம்தேதி) பெரம்பலூர் எளம்பலூர் சாலை, உப்போடையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதன்படி, நேற்று நடந்த மாணவிகளுக்கான போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 276 மாணவிகள் பங்கு பெற்றனர். இந்தப் போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர், 19 வயதிற்கு உட்பட்டோர் என மாணவிகளுக்கு தனித்தனியான எடைப் பிரிவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலிடம் பெறும் மாணவிகள் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறத்தேர்வு பெற்றனர். இந்தப் போட்டியை ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். செயலாளர் விவேகானந்தன், முதல்வர் கலைச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்