Tuesday, September 17, 2024
Home » பெரம்பலூர் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பெரம்பலூர் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

by Ranjith

 

பெரம்பலூர், ஆக. 10: பெரம்பலூர் அருகே தொண்டமாந்துறையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 391 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வட்டத்திற்கு உட் பட்ட தொண்டமாந்துறை கிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் தொண்டமாந்துறை, மலையாளப்பட்டி, பெரியம்மாபாளையம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே அரசு அலுவலர்கள் நேரில் சென்று, கோரிக்கை மனுக்கள் பெற்று, அதற்கு தீர்வு காணும் ஒரு உன்னத திட்டமான இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகள், பேரூராட்சி களில் ஏற்கனவே நடை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஜூலை 11ம்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6-ஊராட்சிகளிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளிலும் என 31 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை 16 முகாம்கள் நிறைவடைந்துள்ளன. வேப்பந் தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 7 முகாம்களும், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 முகாம்களும் வருகிற 29ம்தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி தொண்டமாந்துறை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்து, மனுக்கள் பெற்றும் தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக் களை வழங்கி மனு மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

முகாமில் 391மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில் வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழு தாழை பாஸ்கரன், வேப்பந் தட்டை தாசில்தார் மாயக்கிருஷ்ணன், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi