பெரம்பலூர் அருகே கள்ளத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட துறையூர் சாலையில் உள்ள களரம்பட்டி பகுதியில் வனச்சரகர் பழநிகுமரன் தலைமையில் வனவர்கள் பிரதீப்குமார், குமார், வன காப்பாளர் ராஜீ, வனக்காவலர் அறிவுச்செல்வன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாமரைக்குளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் துப்பாக்கிகளை வைத்து கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் செஞ்சேரியை சேர்ந்த தங்கராசு மகன் கலைச்செல்வன்(32), லாடபுரத்தை சேர்ந்த ரமேஷ்(30) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழும், உரிமம் இல்லாமல் கள்ள துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்துக்காகவும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் கூறுகையில், வனவிலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டத்தை மீறி பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகளை இறைச்சிக்காகவோ, இதர காரணங்களுக்காகவோ வேட்டையாடினால் கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்றார்….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது