பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு

 

பாடாலூர், ஜுன் 18: பாடாலூரில் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி, நேற்று முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஜாமியா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவரவர் சக்திக்கேற்ப ஆடு, மாடுகளை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள், ஏழை, எளியோருக்கு பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை