பெரம்பலூர் /அரியலூர் இந்த தேர்தலில் மோடி என்ற மாயை மக்கள் உடைத்து உள்ளார்கள்

 

அரியலூர், ஜூன் 5: இந்தியா முழுவதும் மோடி என்ற மாயை இந்த தேர்தலில் மக்கள் உடைத்து உள்ளார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான அரியலூர் மாவட்டத்தில் உள்ள எம்ஆர்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணும் மையத்தை சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளரும், விசிக தலைவருமான திருமாவளவன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே கணித்தபடி 40க்கு 40 வெற்றி உறுதியாகிவிட்டது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி 225 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. சென்ற முறை பாஜ தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. மோடி ஒரு மாயை. அது உண்மை அல்ல, மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள் அதனால் அதிக பெரும்பான்மையை பெற முடியாத நிலை பாஜவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலேயும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தமிழக முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் அதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்வார்கள் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு