பெரம்பலூரில் போர் வெல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.7.55லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

 

பெரம்பலூர், ஜூன்.18: பெரம்பலூரில் போர் வெல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ7.55லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டுப் போனது. அக்கா மகள் திருமணத்திற்கு சென்றி ருந்தபோது கொள்ளையர் கைவரிசை காட்டினர். பெரம்பலூர் நகரில் 3-வது கிராஸ் ரோடு, சித்தர் கோவில் எதிரில் வசிப்பவர் ஜெகநாதன் மகன் ரெங்க ராஜ்(40). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.வி. போர்வெல்ஸ் என்ற பெயரில் போர்வெல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 16ம் தேதி மதியம் 3 மணிக்கு, தனது அக்கா புவனேஸ்வரியின் மகள் மகாலட்சுமி என்பவரது திருமணம் வேப்பந்தட்டையில் நடைபெற்றதால் திருமண விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலை யில் நேற்று (17ம் தேதி) காலை அக்கம் பக்கத்தினர் ரெங்கராஜ் வீட்டின் கதவு பூட்டு உடைக் கப்பட்டு கதவு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்ததன் பேரில், ரெங்கராஜ் வேப்பந்தட்டை யில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு வந்து வீட்டைப் பார்த்துள்ளார்.

அதில் திறந்துகிடந்த பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ5.55 லட்சம் ரொக்கப்பணம் ஆகியன திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனால் பெரும் அதிர்ச்சி யடைந்த ரெங்கராஜ் நகை, பணம் திருடுபோனது தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வளவன், பெரம்ப லூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசார் ரெங்கராஜ் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையின் மோப்ப நாய்ப் பிரிவு, விரல் ரேகை பிரிவு நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர். ஆளில்லா வீட்டில் திட்ட மிட்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரம்பலூர் நகரவாசிகளி டம் மிகுந்த அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்