பெரம்பலூரில் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அனுமதி பெற்றே சிலைகளை வைக்க வேண்டும்

பெரம்பலூர்,செப்.7: பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனுமதி பெற்றே சிலைகளை வைக்க வேண்டும் என சிலை வைக்கும் நபர்கள், அமைப் புகள் பொறுப்பாளர்களுக் கான ஆலோசனைக் கூட் டத்தில் டிஎஸ்பி பழனிச்சாமி உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, விநாயகர் சிலைகளை வைத்து வழி படும் நபர்கள்,அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம் பாலக்கரை பகுதி யில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று( 6ம் தேதி) நடைபெற்றது.

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா வரவேற்று முன்னிலை வகித்தார். பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில்,அரசு வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட கட்டாயம் காவல் நிலையங் களில் முன்அனுமதி பெற்றே சிலைவைக்க வேண் டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகி யவை குறித்து காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து காவல் நிலை யத்தில் முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் மின்சாதனங்கள் உபயோகிப்பது மற்றும் அதற்கான மின்வாரியத் துறையின் மூலம் அனுமதி பெறுதல் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத் தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப் பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலை வைக்கும் நபர்கள், அமைப்புகள் பொறுப்பாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர், ஏட்டுகள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை