பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

பெரம்பலூர்,ஜூலை17: பெரம்பலூரில் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றேகால் பவுன் நகை, ரூ.29,500 ரொக்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சி, டைட்டானிக் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் துரைராஜ் (42). இவர் பெரம்பலூர் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (39). இவர் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் 15ம்தேதி காலை 10 மணி அளவில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. இதில் இருந்த 3 பவுன் தாலிக்கொடி, கால்பவுன் தாலி குண்டு, காசு என மூன்றேகால் பவுன் நகைகளும், ரூ.29,500 ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரம்பலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்.இன்ஸ்பெக்டர் சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விரல் ரேகைப் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டு சம்பவம் எளம்பலூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை