பெரம்பலூரில் சித்தர்ராஜகுமார்சாமி வருஷாபிஷேகம்

 

பெரம்பலூர், ஜூலை 22: எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர்ராஜகுமார் சாமிகளின் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் அடுத்த எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் ஆலயத்தில் லபுலிப்பாணி அன்னை சித்தர் ராஜகுமார் சாமி சமாதியில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகத்தையொாட்டி, கோமாதா பூஜை, விநாயகர் பூஜை, மஹாசங்கல்பம், பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை திருச்சி சிவ தெய்வசிகாமணி சிவாச்சாரியார் குழுவினரால் செய்யப்பட்டது.

பின்னர், சாதுக்கள், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மாதாஜிரோகிணி ராஜகுமார் தலைமையில் அறங் காவலர்கள் தவயோகி சுந்தரமகாலிங்கம், தவயோகி தவசிநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில், கோயம்புத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி, பெரம்பலூர் டாக்டர் ராஜா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி