பெரம்பலூரில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு

 

பெரம்பலூர், நவ.26: பெரம்பலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியை அரசுத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (24ம்தேதி) மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும், இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவ.26ம்தேதி இயற்றப்பட்டதால் வருடந்தோறும் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

இந்த வருடம் நவம்பர் 26ம் நாள் அரசு விடுமுறையாக இருப்பதால், அலுவலக வேலை நாளான நேற்று (26ம்தேதி) இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கப் பட்டது. உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு வாசிக்க, அதனை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வாசித்து உறுதியேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைஅலு வலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்