பெரணமல்லூர் ஒன்றிய அளவில் 68 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் வட்டார கல்வி அலுவலர் தகவல்

பெரணமல்லூர், ஜூன் 21: பெரணமல்லூர் ஒன்றிய அளவில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகள் நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார். தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு புகுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் வருகை மற்றும் கற்றல் பாதிக்க கூடாது என்ற நோக்கில் கடந்த ஆண்டு காலை சத்துணவு திட்டத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார். இத்திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்‌. அதன்படி, ஒவ்வொரு தொடக்கப் பள்ளிகளிலும் கணினி வழியுடன் கூடிய வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஆயுதப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மேலத்தாங்கல் அரசு தொடக்க பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் காலை சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்துவிட்டு கூறுகையில், ‘பெரணமல்லூர் ஒன்றிய அளவில் செயல்படும் 68 தொடக்க பள்ளிகளில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஸ்மார்ட் வகுப்பு தொடங்குவதற்கான ஆயுத்த பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பிற்கான இன்டர்நெட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வகுப்பிற்கு தேவையான உபகரணங்களும் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பள்ளி உதவி ஆசிரியர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு