பென்லிங் பிலீவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கோரேகாவை சேர்ந்த பென்லிங் நிறுவனம், புதிதாக பிலீவ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.97,520 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3.2 கிலோ வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகம் வரை செல்லும், 40 கி.மீ வேகத்தை 5.5 நொடிகளில் எட்டும். இதில் உள்ள 3.2 கிலோவாட் அவர் லித்தியம் பெரோஸ் பாஸ்பேட் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120 கி.மீ தூரம் வரை செல்லலாம். ஒரு முறை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். மேலும், இதில் கீலெஸ் இக்னிஷன், யுஎஸ்பி சார்ஜர் இடம்பெற்றுள்ளன. இதில் ஸ்மார்ட் பிரேக்டவுன் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளது. வாகனம் திடீரென நடுவழியில் நின்று விட்டால், இந்த வசதியை பயன்படுத்தி 25 கி.மீ வரை செல்லலாம் என  இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது….

Related posts

கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!

லித்தியம் அயன் பேட்டரி

மின்னழுத்த நிலைப்படுத்தி (VOLTAGE STABILIZER)