பெண் தொழிலாளியை மானபங்கம் ெசய்த பைனான்ஸ் ஊழியர் 5 பேருக்கு போலீசார் வலை வந்தவாசி அருகே கடன் வசூலிக்க சென்றபோது

வந்தவாசி, ஆக 9: வந்தவாசி அருகே கடன் வசூலிக்க சென்றபோது விறகு வெட்டும் பெண் தொழிலாளியிடம் வாக்குவாதம் செய்து மானபங்கம் செய்ததாக தனியார் பைனான்ஸ் ஊழியர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ஜெயந்தி (28). விறகு வெட்டும் தொழிலாளியான இவர் கீழ்கொடுங்காலூரில் உள்ள சுமையா பைனான்ஸ் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் கீழ்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (23) மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 5 நபர்கள் கும்பலாக வந்து கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த ஜெயந்தியிடம் மாத தவணை தொகையை வசூல் செய்ய வந்துள்ளனர்.

அப்போது அடுத்த மாதம் பணம் தருவதாக ஜெயந்தி கூறியுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆபாசமாக பேசி பணம் கட்ட முடியாத உனக்கு ஏன் போன் எனக் கேட்டு ஜெயந்தியை பைனான்ஸ் ஊழியர்கள் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே கூறினால் ஒழித்துக்கட்டி விடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்து நேற்று கீழ்கொடுங்காலூர் போலீசில் ெஜயந்தி புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனியார் பைனான்ஸ் ஊழியர் உள்ளிட்ட 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது