பெண் தொழிலதிபர் வீட்டில் ரூ15 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகன் விஜய் கீழ்ப்பாக்கத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவன் இறந்து விட்டதால் அவர் நடத்தி வந்த பிராணவாயு  ஏற்றிச் செல்லும் லாரி  ட்ரான்ஸ்போர்ட்  மற்றும் சூப்பர் மார்க்கெட்டை தற்போது பானுமதி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று  வீட்டை பூட்டி விட்டு கீழ்பாக்கத்தில் உள்ள மகனின் வீட்டிற்கு பானுமதி சென்றுவிட்டார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்த வள்ளி என்பவர், வெளியே வந்தபோது அங்கே பானுமதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே இதுகுறித்து பானுமதிக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து பானுமதியிடம் விசாரணையில் நடத்தினர்.அதில், வீட்டில் இருந்த 25 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ3.5 ரொக்கம் என ரூ15 லட்சம் மதிப்புள்ள பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து  போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயை  வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….

Related posts

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது