Sunday, June 30, 2024
Home » பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய எம்பி: திரிணாமுல் கட்சியில் பரபரப்பு

பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய எம்பி: திரிணாமுல் கட்சியில் பரபரப்பு

by kannappan

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய திரிணாமுல் கட்சி எம்பியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேற்குவங்க சட்டசபைக்கு 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதுதொடர்பாக, இருகட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் குறிவைத்து வார்த்தைகளால் தாக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் பாஜக எம்பி லோக்கெட் சாட்டர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி கல்யாண் பானர்ஜி என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சி தனது அன்பை பகிர்ந்து கொள்கிறார். மேலும், இந்த வீடியோ குறித்து லோகெட் சாட்டர்ஜி வெளியிட்ட பதிவில், ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிக்கிறது என்பதை பாருங்கள்?. பேரவை தேர்தலில் சீட் கிடைக்காத பாங்குரா தொகுதி பெண் எம்எல்ஏவை எம்பி கல்யாண் பானர்ஜி என்ன செய்கிறார் பாருங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ குறித்து எம்பி கல்யாண் பானர்ஜி தரப்பில் எவ்வித விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் பெண் எம்எல்ஏவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய எம்பியின் வீடியோவால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

14 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi