பெண்ணிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை கணவருக்கு அனுப்பிய வாலிபர் பிடிபட்டார்

சென்னை: சென்னை கொளத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் கொளத்தூர் அண்ணா சிலை அருகில் உள்ள பிரவுசிங் சென்டரில் ஒன்றரை வருடங்களாக அங்கு தொடர்ந்து வேலை பார்த்து வந்தார். அப்போது அந்தக் கடையின் உரிமையாளரான அருணாச்சலம்(28) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அருணாச்சலம் ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது மற்றும் கணவன் மனைவிபோல் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது கலா அருணாச்சலத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து அருணாச்சலம் கலாவின் குடும்ப தேவைக்காக அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கலாவின் பிரிந்து போன கணவர் மீண்டும் கலாவுடன் வந்து சேர்ந்து இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம் கலாவுடன் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். கலா வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் கலாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை கலாவின் கணவர் மற்றும் கலாவின் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அனுராதா அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தார்.போலீசார் தேடுவதை அறிந்த அருணாச்சலம் தலைமறைவானார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அதிகப்படியான பணத்தை வாங்கிக் கொண்டு தற்போது கலா ஏமாற்றியதால் ஆத்திரத்தில் ஒரே ஒரு வீடியோவை மட்டும் அவரது உறவினர்களுக்கு அனுப்பியதாக தெரிவித்தார். தொடர்ந்து அருணாச்சலத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை