பெண்ணிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

 

திருச்சி, ஜூன் 7: பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலர்(40). இவர் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வருவதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்து உள்ளார். அப்போது பஸ்சில் ஏறிய 3 வாலிபர்கள், மலர் வைத்திருந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மலர் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தினர், விசாரனையில் மொபைல் போனை பறித்த மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டி பாரதியார்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(28), பெரியமருது(28), மற்றும் சக்திவேல்(28) ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்