பெண்களுக்கு முக்கியத்துவம்: சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று பொழிச்சலூரில் பெண் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, சிட்லபாக்கம் ராஜேந்திரன் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் முக்கியமாக அனைத்து மகளிர் காவல் நிலையம். பெண்களுக்கு கமாண்டோ படை, முதல் முதலாக தலைமை நிலைய செயலாளராக ஒரு பெண்ணை நியமித்தார்.  பெண்களுக்கு  இலவசமாக மிக்சி, கிரைண்டர் என பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இன்று ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது வழியில் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களின் சிரமத்தை போக்க வாஷிங் மெஷின் வழங்குவதாக அறிவித்துள்ளார். மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற சலுகைகள் எந்த மாநிலத்திலும் வழங்கப்பட்டது இல்லை. எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார். அவருடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்