பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல் விழிப்புணர்வு கூட்டம்

 

தஞ்சாவூர்: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல், தீர்வு காணுதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் அறிமுக உரை ஆற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அனுராபூ நடராஜமணி தலைமை தாங்கினார்.

அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரவிமதி மற்றும் சைல்டு லைன் செட் இந்தியா நிர்வாக இயக்குனர் பாத்திமா ராஜ் முன்னிலை வகித்தார். இறுதியில் ஒருங்கிணைந்த சேவை மைய மூத்த ஆலோசகர் திவ்யா நன்றியுரை ஆற்றினார். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குற்றங்களை குறைத்தல் மற்றும் குற்றங்களுக்கு தீர்வு காணுதல் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்