பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு பொருளாதாரம் அறிந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது மகிழ்ச்சி: பொதுமக்கள் பேட்டி

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து நேற்று  பட்ஜெட் கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் குறிப்பாக சென்னைவாசிகள்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களின் பேட்டி  வருமாறு: நாகராஜ் (பிரின்டர், வண்ணாரப்பேட்டை): பெட்ரோல் விலை 102 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போது தமிழக அரசின் விலை குறைப்பு அறிவிப்பை மனதார வரவேற்று, முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தனேஷ் (சிறு வணிகர், திருவொற்றியூர்): பெட்ரோல் விலை குறைப்பால் பொருட்களின் விலையும் குறையும். இதனால், என்னை போன்ற சிறு வணிகர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைவரும்  பயன் பெறுவார்கள்.பெஞ்சமின், (சமூகஆர்வலர், கொடுங்கையூர்): பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என தொடர்ந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. கடும் நிதி சுமையிலும் மக்கள் பிரச்னையை மனதில் வைத்து தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.அம்பிகா (கட்டிட தொழிலாளி, பல்லாவரம்): கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது, பெட்ரோல் விலை குறைப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் இந்த செயல் எளிய மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதாக உள்ளது.முத்து (ஓட்டல் நடத்துபவர், பரங்கிமலை): பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பால் எங்களது செலவில்  மாதம் ரூ.3 ஆயிரம் குறையும். வருடத்துக்கு ரூ.36 ஆயிரம் வரை சேமிக்கலாம். இந்த விலை குறைப்பு எங்கள் தொழிலுக்கு மட்டுமல்லாமல் வாகனங்களில் தினந்தோறும் கோயம்பேடு சென்று வரும் வியாபாரிகளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. சண்முகம் (பெட்டிக்கடைக்காரர், அயனாவரம்): காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.60ஆக இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் ரூ.100ஐ தாண்டிவிட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பது கூட தெரியாத பிரதமராக மோடி தொடர்வது வேதனையளிக்கிறது. ஆனால், பொருளாதாரம் அறிந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.கார்த்திக் (ஓட்டல் ஊழியர், புழல்): இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் பெட்ரோலுக்காக பெரும்தொகையை செலவழிக்கும் அவல நிலையில், தமிழக அரசின் இந்த விலை குறைப்பு அறிவிப்பு மகிழ்ச்சியான செய்தி. கூலி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இது உதவியாக இருக்கும்.சுரேஷ் (ஆட்டோ டிரைவர், மேற்கு தாம்பரம்): பெட்ரோல் விலை 102  ரூபாயை கடந்து விற்பதால், வருவாய் பாதித்து வாழ்க்கை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது, தமிழக அரசின் இந்த விலை குறைப்பு அறிவிப்பு எங்களை போன்ற ஆட்டோ டிரைவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயகுமார் (தனியார் நிறுவன ஊழியர், துரைப்பாக்கம்): பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பால் வாகனங்களில் பணிக்கு செல்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள். இதற்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி. இதேபோல் மக்கள் நலனை  கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி  புரிவார்.ராமமூர்த்தி (லேத் பட்டறை தொழிலாளி,  தரமணி): பெட்ரோல்  விலை குறைப்பால் எனக்கு ஒரு மாதத்திற்கு 300 முதல் 1000 ரூபாய் வரை மிச்சமாகும். இந்த தொகை குடும்ப தேவைக்கு பயன்படுத்த உதவியாக இருக்கும். என்னை போன்ற தொழிலாளிகளுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.    …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்