பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்து விற்ற டீசலால் பழுதாகி நின்ற கார்-காட்பாடியில் பரபரப்பு

வேலூர் :  காட்பாடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட டீசலால் கார் பழுதாகி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான எரிபொருட்கள் நிரப்புவதற்கான பெட்ரோல் பங்க்குகள் புதிது, புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பங்க்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் போடும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான டீசல், பெட்ரோல் அபேஸ் செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், கோவை பதிவு எண் கொண்ட கார், நேற்றிரவு திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக கோவை சென்றது. அப்போது, காட்பாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அந்த காருக்கு டீசல் நிரப்பி உள்ளனர். பங்க்கில் இருந்து சிறிது தூரம் சென்ற கார் திடீரென பழுதாகி நின்றது. தொடர்ந்து ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னர் அருகில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பழுது பார்த்தபோது, டீசல் பில்டரில் தண்ணீர் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, டீசல் நிரப்பிய பங்க்கில் கேனில் டீசல் பிடித்தபோது, அதில் தண்ணீர் கலந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தவர்களிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லையாம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அந்த நபர் கார் பழுதை நீக்கி எடுத்து சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பெட்ரோல் போட வந்தவர்களும் தண்ணீர் கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘இன்றைக்கு பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடு மிக முக்கியமாக உள்ளது. உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வாகனங்களில் நிரப்பப்படும் பெட்ரோல், டீசல் கலப்படம் இல்லாமல் கிடைக்கிறதா? என்பதில் பெரிய சந்தேகம் உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளை தவிர மற்ற பங்க்குகளில் கலப்பட பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கலப்பட எரிபொருள் விற்பனை டீலரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்து எரிபொருள் விற்பனை செய்வதாக வாகன ஒட்டிகள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக் ஷன் பார்ப்பதால் ஆய்வு செய்ய மறுக்கும் அதிகாரிகள் பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யும் பெட்ரோல், டீசல் தரம் குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள்  மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு ஆய்வு செய்யாமல் உள்ளனர். மேலும் ஒரு சில பங்க்குகளில் திடீர் ஆய்வு எனக் கூறி பணம் கறந்து விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது….

Related posts

யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

ஜூலையில் ஆன்லைனில் பதிவு செய்த 13 பேருந்து பயணிகளுக்கு பரிசு: போக்குவரத்து துறை தகவல்

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம்: சேலம் மாவட்டத்தில் தொடக்கம்