பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சேலம்: தமிழகத்தில் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை 12, 14 காசு குறைந்தது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100ஐ கடந்து சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைந்து, மீண்டும் ரூ.100க்குள் வந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசும், டீசல் லிட்டருக்கு 14 காசும் குறைந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ரூ.99.32க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20 ஆகவும், ரூ.94.66க்கு விற்கப்பட்ட டீசல் ரூ.94.52 ஆகவும் குறைத்து விற்கப்பட்டது. …

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது