பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஒப்பாரி போராட்டம்

குன்றத்தூர்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கடுமையாக உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் வி.எல்.சி.ரவி தலைமை தாங்கினார். ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்றும் நூதன முறையில் ஒன்றிய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையில் விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பினை பதிவுசெய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கவில்லை என்றால் மீண்டும் இது போன்ற ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டம் தமிழகமெங்கும் நடக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் எச்சரிக்கை விடுத்தனர்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்