பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:  பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஒன்றிய அரசு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கண்டிர்து, காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், காஸ் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நகர தலைவர் பாஸ்கர்  ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்  வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் காஸ் சிலிண்டர், பைக் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் உள்ள காந்தி சிலை அருகே நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கிறிஸ்டோபர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி புலவர் தங்கபெரு தமிழமுதன், நகர துணைத் தலைவர் கே.கண்ணன், வட்டாரத் தலைவர் என்.விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சத்தியபால், அக்ரி செல்லப்பன், அக்ரி தினகரன், பரமசிவம், சபாநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டு எரிபொருள் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, பாடையில் வைத்து கண்டன கோஷமிட்டனர்….

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்