பெங்களூரு போதைப்பொருள் வழக்கு ரகுல் பிரீத் சிங்குக்கு நோட்டீஸ்

பெங்களூரு: பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங், தெலங்கானா எம்எல்ஏ ரோகித் ரெட்டி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இரண்டு நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் பெங்களூரு, தெலங்கானாவில் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் சில பிரபலங்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தெலங்கானா எம்எல்ஏ பைலட் ரோகித்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் டிச.19ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து எம்எல்ஏ பைலட் ரோகித் கூறுகையில், ‘எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மைதான். ஆனால் எந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்றார். இதேபோல் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரிக்க நடிகை ரகுல்பிரீத் சிங்குக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது….

Related posts

கல்வியாளர்கள் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பிடிப்பின் பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது : டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு!!

டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்