பெகாசஸ் மென்பொருள் மூலம் ஸ்பெயின் பிரதமர் போன் ஒட்டுகேட்பு: அந்நிய நாட்டின் சதியா என விசாரணை

மாட்ரிட்: ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ், பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் ஆகியோரின் செல்போன்கள் மீது கடந்தாண்டு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலக அமைச்சர் பெலிக்ஸ் பொலானோஸ் தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டில் பிரதமர், பாதுகாப்பு அமைச்சரின் செல்போன்கள் கடந்தாண்டு உளவு தாக்குதலுக்கு உள்ளானது குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் அலுவலக அமைச்சர் பெலிக்ஸ் பொலானோஸ் நேற்று கூட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஸ்பெயின் நாட்டின் பிரதமர், பாதுகாப்பு அமைச்சரின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கடந்தாண்டு உளவு பார்க்கப்பட்டன.பெகாசஸ் உளவு மென்பொருள் அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும். அரசு அனுமதி வழங்காத நிலையில், 3ம் நபர் அந்த மென்பொருளை பயன்படுத்தி பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ், பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் ஆகியோரது செல்போன்களை உளவு பார்த்துள்ளனர். இது நிச்சயம் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது. இந்த உளவு நடவடிக்கையில் வெளிநாட்டின் தலையீடு உள்ளது. இதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பான ஸ்பெயின் தேசிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது….

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!

அதிபர் பைடனை பழைய குப்பை என்று கிண்டல்: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் வீடியோவால் சர்ச்சை