பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளி!: 2-வது நாளாக இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரை பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி உளவுபார்த்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டாவது நாளான இன்று மக்களவை தொடங்கியவுடன் பெகாசஸ் உளவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பின. இதையடுத்து அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரைக்கும் சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவையிலும் அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள். போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். …

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி