பூஸ்டர் தடுப்பூசி ஏன் போடணும்? இதோ 5 முக்கிய காரணங்கள்

புதுடெல்லி: உலகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதில், தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு, இப்போது முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இது போடப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா மீதான பயம் நீங்கி விட்டதால், இந்த பூஸ்டர் தடுப்பூசியை போடுவதில் மக்களிடையே அலட்சியம் காணப்படுகிறது.  இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அங்குள்ள இளைஞர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வரவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை ஏன் கட்டாயம் போட வேண்டும் என்பதற்கான 5 முக்கிய காரணங்களை அது தெரிவித்துள்ளது. அவை வருமாறு: * தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் தட்டம்மை போன்ற நோய்களுக்கு போடப்படும் ‘எம்எம்ஆர்’ தடுப்பூசி, வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி வீரியம் குறிப்பிட்ட கால அளவில் குறைந்து விடும் என்பதால், பூஸ்டர் தடுப்பூயை போட வேண்டும்.* இந்த தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுவதால் செலுத்தி கொண்டவர் மட்டுமின்றி, அனைவரும் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். * தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேரிடம் தொற்றுக்கான அறிகுறி பல மாதங்களுக்கு பிறகும் காணப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதால் இது குறையும்.* நீண்ட கால கொரோனா தொற்று பாதிப்பால் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமலும் பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் போவதால் வருவாய் இழப்பும் ஏற்படக் கூடும். பூஸ்டர் தடுப்பூசி போட்டால், இதில் இருந்து தப்பிக்கலாம்.* கொரோனா தடுப்பூசியை அடிக்கடி போடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கும், மலட்டுத்தன்மை ஏற்படும், மாரடைப்பு, ரத்தம் உறையும் என்பது போன்ற பீதி நிலவுகிறது. சொல்லப் போனால், பூஸ்டர் தடுப்பூசியை போடுவதால் இந்த பாதிப்புகள் குறையும் என்பதே உண்மை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது