பூவோடு எடுத்து ஊர்வலம் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்

திருப்பூர், மே 12: பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை (13-ம் தேதி) வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் இன்று (12ம் தேதி) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை