பூலாங்கிணறு அரசு பள்ளியில் முப்பெரும் விழா

 

உடுமலை, ஜூன் 14: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர் வரவேற்பு விழா, நாட்டு நலப்பணி திட்டத்தின் தொடக்க விழா, போதை ஒழிப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். மாணவ- மாணவிகள் உற்சாகமுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சரவணன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி பற்றியும், போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றியும் கருத்துக்களை கூறி உறுதிமொழி கூறினார்.

அவரை பின்பற்றி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவ-மாணவிகளின் கடமைகள் பற்றியும், ஒழுக்க நெறி கல்வி பற்றியும் சிறப்புரையாற்றினார். பள்ளியின் தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும், மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வழிகாட்டினார். இயற்பியல் ஆசிரியர் ரத்தினசாமி நன்றி கூறினார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்