பூர்வாஞ்சல் விரைவு சாலை திறப்பு; யோகி ரிப்பன்; மோடி கத்தரிக்கோல்: அகிலேஷ் யாதவ் கிண்டல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளத்தில் சவுதுசாராய் கிராமத்தில் இருந்து  பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமம் வரை அமைக்கப்பட்டது. 6 வழிச்சாலையாக கட்டமைக்கப்பட்ட இந்த சாலை ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் உத்தரபிரதேசம் வந்த பிரதமர் மோடி பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தார். முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இன்று ஒரு சிறப்பான நாள். பூர்வாஞ்சல் விரைவு சாலை திறந்து வைக்கப்படுகிறது. இத்திட்டம் உத்தர பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல நன்மைகளைக் கொண்டு சேர்க்கும்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பூர்வாஞ்சல் சாலை திட்டம் சமாஜ்வாதி ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இன்று திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ரிப்பன் (யோகி) லக்னோவிலிருந்து வருகிறது. கத்தரிக்கோல் (மோடி) டெல்லியில் இருந்து வருகிறது. பூர்வாஞ்சல் சாலை திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. முழுமையடையாத இத்திட்டத்தை பிரதமர் மோடி மக்களுக்காக அர்ப்பணிக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு