ஈரோடு, செப். 4: பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.பி. சாமி தலைமை தாங்கினார். இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு. முத்துசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், செல்ல பொன்னி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அவல்பூந்துறை குணசேகரன், செங்கோட்டையன், பெரியசாமி, பால் சின்னச்சாமி, பேரூராட்சி தலைவர் கோபிநாத், பொதுக்குழு உறுப்பினர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.