பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு: நோயாளிகளுக்கு வழங்கும் உணவை பரிசோதனை செய்தார்

பூந்தமல்லி, அக். 17: பூந்தமல்லி அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பூந்தமல்லியில் அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பூந்தமல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனை வளாகத்திலேயே டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டுகளும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சுகாதார செயலாளர் ககன் தீப்சிங் பேடி நேற்று இந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள சுகாதார வசதிகள், கழிவறைகள், மருத்துவர்கள், மருந்துகள், சிகிச்சை, நோயாளிக்கு வழங்கும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் பார்க்கப்படுகிறதா உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறைகளில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தண்ணீர் வரவில்லை, ஒரே கழிவறையை இருவர் பயன்படுத்துவது குறித்து அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து அவர் ஆய்வு செய்து இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய உணவை அவர் சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை பரிசோதனை செய்து பார்த்தார். மருத்துவமனையை முறையாக பராமரிக்காதது குறித்தும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை எனவும் மருத்துவர்களையும், அதிகாரிகளையும் கடிந்து கொண்டார். இதையடுத்து பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் விபத்தில் சிக்க கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகளை ஆய்வு செய்தார். தற்போது கட்டப்பட்டு வரும் மருத்துவமனை வளாகம் சுற்றிலும் கழிவுநீரும், மழை நீரும் தேங்கியுள்ளது.

அதன் உள்ளே செல்லக்கூடிய வழிகள் அனைத்தும் குண்டும், குழியுமாக சாக்கடை கழிவுநீர் கலந்த வகையில் இருந்தது. இந்த பணிகளையும் ஆய்வு செய்துவிட்டு சென்றார். உடன் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் பார்க்கப்படுகிறதா உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறைகளில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடும் நடவடிக்கை
ஆவடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சுகாதார துறை செயலாளர் ககன்தீப் சிங் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை இல்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பகுதிகளில் தன்னீர் தேங்கி கொசு புழு உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,சென்னை மாநகராட்சி ஆணையர் கண்காணிக்க அறிவுறுத்தப்படும்.

மழைக்காலங்களில் வழக்கமாக வரும் காய்ச்சல் தான் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை வீட்டிலேயே மருந்து உட்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனியார் கட்டுமான பகுதிகள், தனியார் இடங்கள், திறந்தவெளிகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உருவாகியது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாத்திரையை பிரித்ததும் பிசுபிசுவென இருப்பது போன்று நோயாளி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஆவடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் வாங்கியுள்ளார். சோடியம் வால்ப்ரோயேட் என்னும் இந்த மாத்திரையை வாங்கிச் சென்று பிரித்து பார்த்தபோது, அவை தரமற்று இருந்தது தெரிய வந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்