பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது செந்துறை அருகே நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

அரியலூர், ஏப்.2: செந்துறை அருகே பள்ளி ஆசிரியையிடம் நகையை பறிக்க முயற்சித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கீழப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்செல்வம். இவர் நேற்று காலை பள்ளிக்கு நடந்துச சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். சுதாரித்துக்கொண்ட ஆசிரியர் செந்தில்செல்வம் கூச்சலிட்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் அவர்கள் 2 பேரையும் துரத்திச் சென்று பிடித்து செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம், சௌந்தரசோழபுரம், பக்ரிப்பாளையம் வெப்படை பகுதியைச் சேர்ந்த சரவணன்(29), விழுப்புரம் மாவட்டம், ஆயத்தூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஆமோஸ்பெர்னாண்டஸ் (28) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Related posts

பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு

தக்கலையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: சீர் செய்த ஆம்புலன்ஸ்

திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மேயர் மகேஷ் வழங்கினார்