பூண்டு ரசம்

செய்முறை: முதலில் எலுமிச்சை பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்து, புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டைத் தோலுரித்து வைக்க வேண்டும். பின்னர் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் துவரம் பருப்பு, 10 பல் பூண்டு, 2 வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைக்க வேண்டும். கடாய் காய்ந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து, வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து, வதக்கி விட்டு, அதனுடன் உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக விடவேண்டும். பிறகு மூடியை திறந்து இவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து, ரசம் ஒரு கொதி வரும் பக்குவத்தில் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்