பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொசஸ்தலை ஆறு செல்லும் 29 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதில் 3231 மில்லியன் கன நீர் சேமிக்கலாம். நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து கால்வாயில் பருவமழையினால் ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் 1002 கன அடி வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனால் நேற்றுமுன்தினம் 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 500 கன அடி நீர் வீதம் வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்துவிடப்பட்டது.  நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1002 கன அடி வீதம் வந்து கொண்டுள்ளது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தில் 34.05 அடி உயரமும், 2839 மில்லியன் கன அடி கொள்ளவாகவும் தண்ணீர் உயர்ந்துள்ளது. எனவே, அணைக்கு வரும் நீர்வரத்து 34.5 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், நேற்று மாலை 6 மணியளவில் 3 மற்றும் 13 ஆகிய 2 மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 1000 கன அடி தண்ணீர் வீதம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியின் நீர்வரத்தை கண்காணிக்கும் வகையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொசஸ்தலையாற்றின் இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

Related posts

‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு அண்ணாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு