பூச்சி மருந்து குடித்த நகைப்பட்டறை தொழிலாளி சாவு

 

ஈரோடு, செப். 30: ஈரோடு, ஈ.பி.பி. நகர், ஜனதா காலனியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (58). நகைப்பட்டறை தொழிலாளி. இவர், தனது மகன் சந்திரபிரகாஷ் (30) உடன் வசித்து வந்தார். நாகேந்திரனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் அடிபட்டதில், சற்று புத்தி பேதலித்த நிலையில் இருந்து வந்தார். இதனால், வீட்டில் உள்ளவர்களை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டியும், சண்டையிட்டும் வருவாராம். மேலும், தான் உயிருடன் இருந்து யாருக்கு என்ன பயன்? சாகப் போகிறேன் என்றும் தனக்குத் தானே பேசி வருவாராம்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்த நாகேந்திரன், தான் வேலை செய்யும் நகைப்பட்டறைக்கு சென்று படுத்து கொண்டாராம். மறுநாள் காலை, அவர் மயங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை