புளியமரத்திற்கு தீ வைத்த கும்பல்

போச்சம்பள்ளி, டிச.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. ஏலம் விடுவதன் மூலம், புளியம்பழங்களை விவசாயிகள் பறிக்கின்றனர். இந்த புளிய மரங்களில் தேனீக்கள் அதிகம் கூடுகள் கட்டி உள்ளது. மரக்கிளைகள் மற்றும் கைக்கு எட்டும் தூரத்தில் தேனீக்கள் கூடுகட்டி உள்ளது. இதில் தேனை எடுக்க, சிலர் மரங்களுக்கு தீ வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாகரசம்பட்டி பேரூராட்சி என்.தட்டக்கல் கிராமத்தில், சாலையோர புளிய மரங்களில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது. இதில் ஒரு மரத்திற்கு நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு ஓடினர். இது குறித்த தகவலின் பேரில், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மரங்களுக்கு தீ வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை