புலியூர் ஜம்புஏரியில் வெளிநாட்டு பறவைகள் முகாம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 65 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள புலியூர் ஜம்பு ஏரிக்கு, பாரூர் பெரியஏரியின் உபரிநீர் வருகிறது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படும்போது ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்தாண்டும் ஏராளமான பறவைகள் புலியூர்ஜம்பு ஏரிக்கு வந்த வண்ணம் உள்ளது. வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, நீர்க்காகம், பிளம்மிங்கோ உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இந்த பறவைகள் இங்கு கிடைக்கும் சிறுமீன்கள், புழு பூச்சிகளை உணவாக்கி கொள்கின்றன. இந்த பறவைகள் 2 மாதம் ஏரியை ஒட்டிய தென்னந்தோப்புகள் மற்றும் மரங்களில் தங்கி கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து பின்பு, மீண்டும் அதன் இருப்பிடத்துக்கு சென்று விடுகின்றன. தற்போது ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளதால் காலை, மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் பறவைகளை கண்டு களிக்கின்றனர்….

Related posts

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு