புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் 193 இடங்கள் நிரம்பின

 

கோவை, ஜூன் 29: கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், பி.எஸ்.சி கணினி அறிவியல், கணிதம், பி.ஏ ஆங்கிலம், தமிழ் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் 240 இடங்கள் உள்ளது. இந்த படிப்புகளுக்கு நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதில், மொத்தம் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பின்னர், மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 30-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடந்தது.

இதையடுத்து, 2-ம் கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு மூலம் மொத்தம் 193 இடங்கள் நிரம்பியது. மேலும், தமிழ், ஆங்கிலம் பிரிவில் தலா 18 இடங்கள், கணிதம் பாடத்தில் 21 இடங்கள் என மொத்தம் 57 இடங்கள் மீதமுள்ளது. இந்த இடங்கள் 3-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் எனவும், கலந்தாய்வு குறித்த தேதி அரசு அறிவித்தவுடன் தெரிவிக்கப்படும் எனவும் கல்லூரியின் முதல்வர் வீரமணி தெரிவித்தார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை