புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், நவ.9: நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை, நுரையீரல் புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் கலெக்டர் உமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தங்கம் மருத்துவமனை டாக்டர் சரவணா ராஜமாணிக்கம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார். மருத்துவமனை சார்பில், முதல் 100 பேருக்கு லோடோஸ் சிடி ஸ்கேன் இலவச பரிசோதனை செய்யப்படும் என மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குழந்தைவேல் தெரிவித்தார். மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், சமூக ஆர்வலர் மாரிமுத்து யோகநாதன், வன பாதுகாப்பு திட்ட இயக்குனர் ராஜேஷ், டாக்டர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை