புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.1.25 லட்சம் நிதியை மேயரிடம் வழங்கி மாணவ-மாணவிகள்

திருப்பூர், ஏப். 30: தமிழக முதல்-அமைச்சர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம், மேயர் அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு, வீரபாண்டி பிரிவு விருஷா சர்வதேச பள்ளியில் 70 மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து அவர்களின் சேமிப்பு தொகை மற்றும் சிறு பொருட்கள் விற்பனை மூலம் பங்களிப்பு தொகையாக ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், விருஷா சர்வதேச பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி