புறா பறக்கவிடும் போட்டி

 

கோவை, ஜூலை 2: கோயம்புத்தூர் புலியகுளம் பீஜியன் பிரண்ட்ஸ் அசோசியேசன் சார்பில், 19வது ஆண்டு புறா பறக்கவிடும் போட்டி புலியகுளம் பெரியார் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 கூண்டு அணிகள் பங்கேற்றன. முன்னதாக புறாக்களுக்கு போட்டி அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் பாபு சீல் வைத்தார். தொடர்ந்து காலை 7 மணிக்கு உரிமையாளர்கள் புறாக்களை பறக்க விட்டனர்.

இந்த சாதா புறாக்கள் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பறக்க வேண்டும். எட்டு மணிக்குள் கூண்டில் அமர வேண்டும். இதை வைத்து முதல், இரண்டு, மூன்று பரிசுக்குரிய புறாக்கள் தேர்வு செய்யப்படும். மாலை 8 மணியை தாண்டி புறா பறந்தால் புறா போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். இந்த புறாக்கள் கூண்டில் அமர்வதை கண்காணிக்க போட்டி நடத்துபவர்கள் சார்பில் கண்காணிப்பாளர்கள் கூண்டு அருகே இருந்து புறாக்களை தேர்வு செய்தனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதியில் நீலகிரி திமுகவினர் பிரசாரம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கன மழை கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்

குற்றங்கள் நிகழ்ந்தால் உடனே அழைக்கவும் போலீசார் ஆலோசனை