புரட்டாசி முதல் சனிக்கிழமை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பாடாலூர், செப்.24: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். அதுபோல் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம் குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர் திருவளக்குறிச்சி, பெருமாள் பாளையம், சீதேவிமங்கலம், ஆலத்தூர் கேட், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், காரை, செட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி