புனேவில் இருந்து விமானத்தில் தமிழகத்துக்கு 6 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் வந்தது

சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழக அரசு, மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை கேட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று மத்திய மருந்து தொகுப்பு கிடங்குகளிலிருந்து புனே, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களிலிருந்து தடுப்பூசி மருந்துகளை அனுப்பிவருகிறது. அதன்படி நேற்று மதியம் புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ்  கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் வந்தன. இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு 3.5 லட்சம் டோஸ் மருந்துகளும், 2.5 லட்சம் டோஸ் மருந்துகள் சென்னை பெரிய மேட்டில் உள்ள மற்றொரு மருந்து கிடங்கிற்கும் கொண்டு சென்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை