புனித மிக்கேல் ஆலய தேர்பவனி

சேலம்: சேலம் அழகாபுரத்தில் உள்ள முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. சேலம் அழகாபுரத்தில் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நடப்பாண்டு தேர்பவனி திருவிழா கடந்த 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம், மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து 6 நாட்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி நேற்றிரவு நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை திருவிழா திருப்பலி, சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடந்தது. மாலையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, அதனை தொடர்ந்து மிக்கேல் தேர்பவனி நடந்தது. அருட்தந்தை மரியசூசை தேரை மந்திரித்து, தேர்பவனியை துவக்கி வைத்தார். இதில் அருட்தந்தையர்கள் சகாயராஜ், ஸ்டேன்லி, விமல், கென்னடி, டேவிட், சார்லஸ், சமூக சேவை சங்க இயக்குனர் டேவிட் மற்றும் பங்கு மக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். தேர்பவனிக்கான விழா ஏற்பாடுகளை, ஆலய பங்குதந்தை எட்வர்ட்ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை