புனித சலேத் அன்னை ஆலயம் செல்ல ரூ.2.15 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல், ஆக. 6: கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள புனித சலேத் அன்னை ஆலயம் செல்ல ரூ.2.15 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மிகவும் பிரசித்தமான ஆலயம் சலேத் அன்னை ஆலயம். இந்த ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்திற்கு செல்லும் செயின்ட் மேரி சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற நிலையில் இருந்தது. கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து இந்த ஆலயம் வரை செல்லும் சாலையான செயின்ட் மேரிஸ் சாலையும் மோசமான நிலையில் இருந்தது. இதுபற்றி இந்த பகுதி பொதுமக்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள், கொடைக்கானல் பொதுமக்கள் அனைவரும் பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் இடம் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் செயின்ட் மேரிஸ் சாலை புதிதாக அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.2.15 கோடி செலவில் செயின்ட் மேரிஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை தலைமையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் கொடைக்கானல் நகர்மன்ற துணை தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொடைக்கானல் திரு இருதய ஆலய பங்குத்தந்தையும் வட்டார அதிபருமான சிலுவை மைக்கேல்ராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், திரு இருதய ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயிண்ட் மேரிஸ் சாலை ரூ.1.75 கோடி செலவில் தார்சாலையும், இதே பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் இணைப்பு சாலையாக சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.2.15 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய கொடைக்கானல் நகர் மன்றத்திற்கும் தலைவர் துணைத் தலைவருக்கும் பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் ஆகியோருக்கும் கொடைக்கானல் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்