புத்தேரி ஏரி நீரில் தொழிற்சாலை கழிவு இல்லை: மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல்

தாம்பரம், நவ.25: குரோம்பேட்டை புத்தேரி ஏரியின் உபரி நீரில் வெண்பஞ்சு போன்ற நுரை வெளியேறுவது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம், தாம்பரம் மாநகராட்சியால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கடந்த 20ம் தேதி, புத்தேரி ஏரியிலிருந்து, நுரையுடன் கூடிய நீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றது. இந்த பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், புத்தேரி ஏரியிலிருந்து வெளியேறும் நீர், ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயம் செய்துள்ள அளவுகோலுக்கு உட்பட்டுள்ளது.
இதில் தொழிற்சாலை கழிவுகள் ஏதும் இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தேரி ஏரி நீரை கிண்டி அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவரால் ஆய்வு செய்து முழுமையான அறிக்கை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்